Friday, 31 August 2018

பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்!!!

பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்


பல ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண, படிப்பறிவற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளை
 மருத்துவர்கள்,
 பொறியாளர்கள்,
 அறிவியலாளர்கள்,
 கணக்காளர்கள்,
 வழக்குரைஞர்கள்,
 கட்டிடப் பொறியாளர்கள்,
 தொழிலதிபர்கள் 
எனப்படும் Group 'A' குழந்தைகளை உருவாக்கினார்கள்.

இந்த Group 'A குழந்தைகளில் பெரும்பாலும், தொடக்கப் பள்ளியிலிருந்து, தாங்களே போராடி, மிகப் பெரிய பதவிகளை அடைந்தனர்.
அவர்கள்

வெறுங்காலில் நடந்தனர்
காடுகளுக்குச் சென்றனர்
தண்ணீர் பிடித்தும், 
விறகு சேகரித்தும் வேலை செய்தனர்
செல்லப் பிராணிகளைக் கவனித்தனர்
வாழ்க்கை நடத்த, பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்தனர்

இன்றோ Group A பெற்றோர் Group 'B' குழந்தைகளை உருவாக்குகின்றனர்.

இந்த Group B குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் மீது
 அதிக கவனம் செலுத்துகின்றனர்
 பாலர் பள்ளி முதல், கல்லூரி வரை, அவர்களது வீட்டுப் பாடம், செய்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உதவுகின்றனர்.
 குழந்தைகள், அதிகக் கட்டணம் பெறும் பள்ளிக்குச் செல்ல, தனிக் கார், ஓட்டுனர், வெளிநாட்டில் படிப்பு எனப் பல வசதிகளைத் தருகின்றனர்.

 குழந்தைகளால், காலை முதல் இரவு வரை, திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது.
 குழந்தைகளை, ராஜா, ராணிகளைப் போல, அதிக மதிப்புக் கொடுத்து, வளர்க்கின்றனர்.
 வீட்டில், குழந்தைகள், சிறு வேலைகளைக் கூட செய்வதில்லை.
 உணவு, மேசைக்கு வந்து விடுகிறது.

 சாப்பிட்ட தட்டுகள் கூட பெற்றோராலோ, வேலைக்காரிகளாலோ கழுவப்படுகின்றன.
 விலையுயர்ந்த துணிமணிகள், போக்குவரத்துச் சாதனங்கள் முயற்சியின்றிக் கிடைக்கின்றன.
 பணம் வீணாகிறதே என்ற கவலையில்லை!!!

 பெற்றோர் இத்தனை உதவிகள் செய்தும்,  அவர்களுள் ஒரு சிலரால் மட்டுமே, சரியாகப் பேசவும் or எழுதவும் முடிகிறது. 

Group 'A' குழந்தைகள் தங்கள் பெற்றோரையும் | குழந்தைகளையும் நன்கு கவனித்துக் கொண்டனர்.

Group 'B', பெற்றோர் தங்கள் குழந்தைகள் 30+ வயதைக் கடந்த பிறகும், சொந்தக்காலில் நிற்க வைக்க உதவுகின்றனர்.‼

உதவி பெற்றே வளர்ந்த குழந்தைகள் இன்றும் பெற்றோரின் உதவியையே நாடுகின்றனர்.
தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள இயலாத போது, பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் உதவுவது எப்படி?

இறுதிக் காலத்தில், பெற்றோர், தாங்களே வாழ வேண்டியுள்ளது.

நீங்கள் இதில் எந்த வகை

தேவையின்றி குழந்தைகளுக்கு வலியச் சென்று உதவாதீர்கள்.

உங்கள் குழந்தைகள் அறிவாளியாக, புத்திசாலியாக, பலசாலியாக வளரட்டும்.

வாழ்க்கையின் நிதர்சனம், உண்மைகளை நேரடியாகச் சந்தித்து தானாகச் செயல்படும் இளைஞராக வளரட்டும்.

கடினமான நேரங்களை எதிர்கொள்ள
மற்றவர்களை மதிக்க
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.

உங்கள் பெற்றோரால் முறைப்படி  வளர்க்கப்பட்ட நீங்கள்,
உங்கள் குழந்தைகளையும் பயனுள்ள குழந்தைகளாக வளருங்கள்...

மனம் நிறைந்த வாழ்த்துகள்...

இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா

Wednesday, 29 August 2018

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரை

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:

எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.!

இந்தநாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் ...
எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள்
அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்.

இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்"
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்.

ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.
ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது.

கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது.

எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்.

எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.

அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.
ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதே வேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறை வைக்காதீர்கள்.

அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள்.

உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.
அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள்.
அவளைப் புரிந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய மருமகனே…
இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.
அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன் ....!

இந்தஆண்டின் மிகச்சிறந்த வாட்ஸ்ஏப் பதிவு என பெண்குழந்தையை பெற்ற ஒவ்வொருவரும் அவரவர் மனபிரதிபலிப்பாக போற்றும் பதிவு

நமது தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?

நமது தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?




தேச தாய் -  பாரதமாதா

தேசதந்தை - மகாத்மா காந்தி


தேச மாமா - ஜவஹர்லால் நேரு



தேச சேவகி - அன்னை சாரதா



தேச சட்டமேதை - அம்பேத்கார்



தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன்


அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்




தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி


நாட்காட்டி - 1957 சக ஆண்டு



நகரம் - சண்டிகார்



உலோகம் - செம்பு



உடை - குர்தா புடவை



உறுப்பு - கண்புருவம்



தேச கவிஞர் - இரவீந்தரநாத்



தேச நிறம் - இளசிவப்பு



தேச சின்னம் - நான்குமுக சிங்கம்



தேச பாடல் - வந்தே மாதரம்



தேசிய கீதம் - ஜனகனமன


தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே


தேசிய நதி - கங்கை



சிகரம் - கஞ்சன் ஜங்கா



பீடபூமி - தக்கானம்



பாலைவனம் - தார்



கோயில் - சூரியனார்



தேர் - பூரி ஜெகநாதர்



எழுது பொருள் - பென்சில்



வாகனம் - மிதிவண்டி



கொடி - மூவர்ணக் கொடி


விலங்கு - புலி



மலர் - தாமரை



விளையாட்டு - ஹாக்கி



பழம் - மாம்பழம்



உணவு - அரிசி



பறவை - மயில்



இசைக் கருவி - வீணை



இசை - இந்துஸ்தானி



ஓவியம் - எல்லோரா



குகை - அஜந்தா


மரம் - ஆலமரம்


காய் - கத்தரி



மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்


மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி


நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்


மொழி - கொங்கனி, பெங்காளி, பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்


மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்)


பெரு உயிரி - யானை


நீர் உயிரி - டால்பின்


அச்சகம் - நாசிக்


வங்கி - ரிசர்வ் வங்கி


அரசியலமைப்பு - சட்டபுத்தகம்


கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)



நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.



இசை மற்றும் இலக்கிய பணியில்

என் சுவாச காற்றே | Keyboard notes

என் சுவாச காற்றே | Keyboard notes








En Swasa Katre Song Notes


J.E.Jebha