Saturday 2 March 2019

முடிவு | J.E.Jebha

முடிவு



அன்று பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

காலை முதலே பள்ளியில் மாணவர் கூட்டம் அலைமோதியது. அலுவலக நிர்வாகி சுமார் 10 மணியளவில் பள்ளியை திறக்க, மாணவர்கள் முண்டியடித்து பள்ளியினுள் நுழைய, அவர்களுடன்,  அப்பள்ளியே முதல் மாணவனாக வருவான் என்று எதிர்பார்த்த ராமும் தனது மதிப்பெண்ணை தேடினான்.

வெற்றிப் பெற்றவர்கள் ஆடி பாடி கொண்டாட, தலையில் இடி விழுந்தவன் போல பட்டியலை மேலும் கீழும் பல நூறு முறை தேடினான் ராம்.

தனது எண் பட்டியலில் இல்லை.

அங்கிருந்து வெளியே வந்தவன் கால் போன திசையில் ஓடினான்.

எங்கே செல்வது,

என்ன செய்வதென்று தெரியாத ராம்,

வாழ்க்கையின் முடிவை நோக்கி,

மலையின் உச்சியை நோக்கி ஓடினான்.

பின்னே ஒரு மகிழுந்து வேகமாக ஒலியெழுப்பி அருகில் வந்தது. உள்ளே தலைமையாசிரியர். "அட மடையா, அறிவிப்பு பலகையை மறந்து, உன் கையிலுள்ள கைபேசியில் தேடு உன் எண்ணை;

நீ தான் மாநிலத்தில் முதல் மாணவன் "

என்று கூறவும் கல் தட்டி, 

கால் தடுக்கி,

கட்டிலிலிருந்து கீழே விழுந்தான்,

மாட்டு தொழுவத்தில் உறங்கி கொண்டிருந்த ராம்...

இசை மற்றும் இலக்கியபணியில்
J.E. ஜெபா