Saturday 24 March 2018

தாரை தமிழர் இசைக் கருவி



தமிழர் இசைக் கருவிகள்


தமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள் உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), நரம்புக் கருவி (தந்தி அல்லது கம்பிகள் பொருத்தப்பட்டவை), மிடற்றுக்கருவி (வாய்ப்பாட்டு), கஞ்சகருவி (சேகண்டி, ஜாலரா போன்ற தட்டுக்கருவிகள்). தமிழ் இசையில் (புல்லாங்) குழல், யாழ் பிரபலமானவை. தோலிசைக் கருவிகள் எண்ணிறைந்தவை


தாரை


தாரை எனப்படுவது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக் கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான, இடை நிற்காத இசை தருவதுஊதும்பகுதி சிறுத்தும், இடைப்பகுதி மேல்நோக்கி வளைந்தும், அடிப்பகுதி அகன்றும் காணப்படும் வித்தியாசமான பழந்தமிழ் ஊது கருவியே தாரை. மரியாதையின் அடையாளமாகக் கருதப்படும் கிராமிய இசைக்கருவிகளில் இது முதன்மையானது. கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போதும், தேர்த்திருவிழா காலத்திலும், கொண்டாட்டங்களிலும் இக்கருவி இசைக்கப்படுவதுண்டு. தாரை இசைத்து, தப்பட்டை அடித்து வரவேற்பு வழங்குவதும், சடங்குகளை நிகழ்த்துவதும் தமிழ்ச்சமூகத்தின் மிக முக்கியக்கூறுகளில் ஒன்று

பாலைப்பண், குறிஞ்சிப்பண், மருதப்பண், செவ்வழிப்பண், கௌசிகம், தோதிறம், சீராகம், காந்தாரம், செந்துருத்தி, படுமலைப்பண், நைவளப்பண், அரும்பாலைப்பண் என பழந்தமிழ் இசையில் 11,991 பண்கள் இருந்ததாகச் சொல்கிறது சிலப்பதிகாரம். உலகில் வேறெந்த இசை வடிவத்துக்கும் இல்லாத பெருஞ்சிறப்பு இது. இசையாலும் கூத்தாலும் இறைவனையே வசியம் செய்தவர்கள் தமிழர்கள். இம்மண்ணில் இருந்தே இசையறியும் நுட்பம் உலகுக்கெல்லாம் பரவியதாகச் சொல்கிறார்கள் அறிஞர்கள். இசைத்தமிழின் பண்சிறப்பும் தாளக்கோட்பாடுகளும் எண்ணற்ற இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இயற்கையைச் சார்ந்து அமைந்த அந்தப் பண்களைப் போலவே, அவற்றுக்கான இசைக்கருவிகளும் இயற்கைத் தன்மை பொருந்தியவை. தாரையின் ஆதிவடிவமும் அவ்விதமானதே. இதன் மூலக்கருவி, விலங்குகளின் கொம்பு

நாதஸ்வரம், எக்காளம், பூரி, வாங்கி, பாங்கு, திருச்சின்னம் போன்ற பிற்கால காற்றுக்கருவிகள் அனைத்தும் கொம்பின் தொடர்நிலைக் கருவியான தாரையின் மருவிய வடிவங்களே. ஐந்தாறு பாகங்களைக் கொண்ட தாரை, எளிதாகக் கழற்றி மாட்டும் வசதியோடு உருவாக்கப்படும். தற்காலத் தாரைகள் பித்தளையில் செய்யப்படுகின்றன.

‘‘தாரை என்றால் சீரான, இடைநிற்காத இசைதரும் கருவி என்று பொருள். இக்கருவியில் இருந்து தோன்றும் இசை, காற்றின் தன்மைக்கேற்ப இடைநிறுத்தம் இல்லாமல் ஒலிக்கும். நாதஸ்வரம் போல காற்றை வசப்படுத்தி இக்கருவியை இசைக்க முடியாது. பலம் கொண்ட அளவுக்கு காற்றை உள்ளே செலுத்த வேண்டும். அக்காற்றின் அளவைப் பொறுத்தே இசையின் தன்மை இருக்கும்’’ என்கிறார் சென்னை இசைக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுப்புலட்சுமி மோகன்.

இக்கருவியை ஒருவர் மட்டுமே தாங்கிப் பிடித்து வாசிப்பது சிரமம். தொய்ந்து கீழே விழாமல் நடுவில் இருவர் தாங்கிப்பிடித்துக் கொள்வதுண்டு. தொடக்கத்தில் இக்கருவி ஆபத்தை உணர்த்தும் குறியீட்டு ஒலியாகவும், குழுக்களுக்கு இடையிலான தகவல் 
பரிமாற்ற சத்தமாகவும் பயன்பட்டதாகச் சொல்கிறார் டாக்டர் சுப்புலட்சுமி

பிற்காலத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் விழாக்களை அறிவிக்க, அரசர் வருகையை உணர்த்த இசைக்கப்பட்டது. இப்போது இக்கருவி வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது

இக்கருவியில் விரல்துளைகள் இல்லை. காற்றைச் செலுத்த முகப்பில் ஒரு சிறிய துளையும், இசை வெளியேற முடிவில் புனல்வடிவ துளையும் மட்டுமே இருக்கும். சிறுதாரை, கோணத்தாரை, நெடுந்தாரை என சிறிய வடிவ வேற்றுமைகளுடன் இக்கருவி பயன்படுத்தப் பட்டதுஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி தொடங்கி அர்த்தஜாமப் பூஜை வரை அன்றாடம் நடக்கும் பலவிதமான சடங்குகளின்போதும், உபசாரங்களின் போதும் பலவிதமான வாத்தியங்கள் சைவ, வைணவக் கோயில்களில் வாசிக்கப்படுகின்றன. சங்கு, கொம்பு, பிரம்ம தாளம், உடல், குட்டத்தாரை, திருச்சின்னம், நெடுந்தாரை போன்ற பழங்கால வாத்தியங்களைப் பற்றிய குறிப்புகள் தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் காணப்படுகின்றன.

இப்போது திருச்சி மற்றும் தஞ்சை சுந்தரப்பெருமாள் கோவில் பகுதிகளில் மட்டும் தாரைக்கருவிகளும், வாசிக்கும் கலைஞர்களும் மிஞ்சியிருக்கிறார்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் அருகிவிட்டதால், அழிவின் நுனியில் தொக்கி நிற்கிறது இந்த இசைக்கருவி.

சுந்தரப்பெருமாள் கோவிலில், லெட்சுமணன் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் தாரை வாசிக்கிறார்கள். இக்குழுவில் உள்ள மார்க்கண்டேயன் என்பவர் பார்வையற்றவர். உத்திராபதிக்கு காது கேட்காது

‘‘நமரி, எக்காளம், திருச்சின்னம், தாரை எல்லாம் மங்கள வாத்தியங்கள். எங்க தாத்தா காலத்தில கல்யாணம், காதுகுத்துன்னு வீட்டுல நடக்கிற சுபகாரியங்கள் எல்லாத்துக்கும் தாரைக்காரங்களை கூப்பிடுவாங்களாம். எந்நேரமும் வேலை இருக்குமாம். இப்போ அந்த பழக்கமெல்லாம் அருகிப்போச்சு. எப்பவாவது கட்சி மாநாடு, ஊர்வலங்களுக்கு அழைப்பு வரும். ஊர்வலத்துக்கு முன்னாடி வாசிச்சுக்கிட்டே நாங்க போவோம். எல்லாரும் இந்தக் கருவியை விசித்திரமா பாப்பாங்க. சாதாரணமா எல்லாரும் இந்தக் கருவியைக் கத்துக்க முடியாது. ரத்தத்துல ஊறணும். இதுக்குன்னு எந்த இலக்கண முறையும் கிடையாது. எங்க அப்பா ஊதுறதைப் பாத்து நாங்க கத்துக்கிட்டோம். ஆனா, எங்க புள்ளைகளுக்கு இதில ஆர்வமில்லே. மூச்சை தம் கட்டி ஊதுறதுக்கு இன்னைக்கு உள்ள பிள்ளைகளுக்கு வலிமை போதாது’’ என்கிறார் மார்க்கண்டேயன்

தமிழகத்தில் ஆதரவற்றுப் போன இக்கருவி, மத்தியப் பிரதேசத்தில்கோஹிக்என்ற பெயரிலும், உத்தரப் பிரதேசத்தில்துரிஎன்ற பெயரிலும், கர்நாடகத்தில்பாங்குஎன்ற பெயரிலும், குஜராத்தில்நாகபாணிஎன்ற பெயரிலும், மகாராஷ்டிராவில்துதரிஎன்ற பெயரிலும், ஒரிசாவில்கஹல்என்ற பெயரிலும், கங்கை சமவெளி பிரதேசத்தில்கர்ணஎன்ற பெயரிலும் மிகச்சிறிய மாற்றங்களோடு பரவலாக புழக்கத்தில் இருக்கிறதுதுக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் தாரை-தப்பட்டை, கொம்பு ஊதுவது வழக்கம். இன்றளவும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் கொம்பு ஊதுவதைப் பார்க்கலாம்


திருமுறை ல் தாரை



சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி 
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி 
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் 
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581



அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் 
சங்கம் படகம் கருவி தாரை முதலான 
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் 
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் 12.1931



சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101



புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே 
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை 
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது 
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத 12.2121



சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் 
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற 
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப 
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181



பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் 
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் 
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் 
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518



பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி 
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன 
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு 
எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 12.2641



சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது 
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம் 
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப் 
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர சமய கோள் அரி வந்தான் என்று ஊத 12.2802



சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம் 
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம் 
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் 
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே 12.3097



சீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் 
ஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம் 
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு 
தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று 12.3118


கொம்புத்தாரை: 

விலங்குகளின் கொம்பு களைக் கொண்டு அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட இக்கருவியானது நாட்டுப்புற இசையிலும் கோயில் விழாக்களிலும் பயன்படுத்தப்பட்டது.


Monday 12 March 2018

சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பிண்ணனி

கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார்.
கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார்.

1852ம் ஆண்டு  இடையன்குடியில் ஊழியஞ்செய்த மிஷனெரி கால்டுவெல் அவர்களால் சாயர்புரம் செமினரியில்
தமிழ் பண்டிதராக கிறிஷ்ண பிள்ளை பணியமர்த்தப்பட்டார்அவர் விதித்த கட்டளை
தன்னை யாரேனும் கிறிஸ்தவனாக்க முயன்றால் வேலையை ராஜினமா செய்துவிடுவேன் என்பதே !!! சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ் செய்த
Rev ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி அவருக்கு
புதிய ஏற்பாட்டைக் கொடுக்கவே
தன் வேலையை ராஜினமா செய்து விட்டார்.
பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச் செய்தார். கிருஷ்ணப்பிள்ளை Mrs  ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள்.

அது அவரை சிந்திக்க தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம் அவர்களோ நம்மை நேசிக்கிறார்களே என்று சிந்தித்தார்.
ஆயினும் மனம் மாறக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தார் அவ்வேளையில் நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்த  கிருஷ்ண பிள்ளையின் சகோதரர்  முத்தையா மற்றும்  தனுக்கோடி ராஜீ ஆகியவர்கள் கிறிஸ்தவத்தை தழுவி மனம் மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து பாளையங்கோட்டை அருகேயுள்ள கரையிருப்புக்கு நடந்தே சென்றார்.

ஆனால் அவரது சகோதரின் சாட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயாணம்,
புதிய ஏற்பாடு, இளமை பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் ஆதியாகமம் முதல்‌ யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்து கொண்டார்.

அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்து️வுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதி கொண்டார்.

வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார்.
தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து
ஹென்றி ஆலப்ர்ட் கிருஷ்ணப்பிள்ளை என 1858 ஏப்ரல் 18ம் தேதி  மயிலாப்பூரிலுள்ள தூய தோமா திருச்சபையில்  திருமுழுக்கு  பெற்றுக்கொண்டார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனே பாடுகளும் வரத்தொடங்கின. முதலில் அவரது மனைவியும் தாயாரும்  எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணி செய்ய சென்னைக்கு ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்நேரத்தில் தான் தனக்கு கர்தரைத் தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து
" சத்தாய் நிஷ்களமாய்"  என்னும் கீர்த்தனையை இயற்றினார். நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.
இலக்கிய வாஞ்சையுள்ள இவர்,
அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க
ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல்,
கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய இரட்சணிய தேவாரம் என்பன கிருஸ்ண பிள்ளையினால் இயற்றப்பட்டது. தமிழ் பண்டிதராக சாயர்புர கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் ஐயர்  இவரை மனிதரை பிடிக்கிறவர் என அழைத்தார்.

இவர் ஏராளமான கிறிஸ்தவ பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல்
தலை சிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூலை எழுதி️னார்.
கிருஸ்ணபிள்ளை அவர்கள்
"கிறிஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சந்தாய் நிஷ்களமாய் பாடல்
இன்றும் தேவாலயங்களில் விரும்பி பாடப்படும் கீர்த்தனையாகும்.

1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73ம் வயதில் மரித்த இவர் சமாதானப்புரத்திலுள்ள
கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
கிறிஸ்தவ விரோதிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள்ஆனால் அவர்களுக்காக மரித்த இ️யேசு இன்னும் அவர்களை நேசிக்கிறார்.
அவர்களை மாற்ற வல்லவராயும் இருக்கிறார்.  
இதை அறிந்த நாம் அறியாதவர்களுக்கு அறிவிப்போம்.

Friday 9 March 2018

எழும்பி பிரகாசி

எழும்பி பிரகாசி

(தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் வெற்றி பாடல்)

ALSTON JOAN creations

Music
Steve Beniston

LYRIC
TUNE
SUNG by
GNANARAJAN DURAI
ஞானராஜன் துரை

எழும்பிப் பிரகாசி உன் ஒளிவந்தது
எதிர்வரும் தேர்வெல்லாம்
ஜெயமே தந்தது

கல்வித் தீபம் கண்ணாய்த் தந்தார்
கர்த்தரே அதனில் ஒளியாய் நின்றார் (எழு)

புதிர் தரும் கேள்வியின்
விடையாய் வந்தார்
கதவினைத் தட்டினால்
திறந்திடச் செய்தார்
விதவிதத் தேடலில் விடியலாய் உதித்தார்
நிதமவர் துதியினைத் நாவினில் தந்தார் (எழு)

கால் கொண்டு கடக்கக் கடலும் வழிவிடும்
மேல் தரும் துணிவால் பயமும் நழுவிடும்
நூல் கொண்ட அறிவால் நலங்கள் தழுவிடும்
ஆள்பவர் ஏசுவைத் தினம் மனம் வழிபடும் (எழு)

இறைவனின் பெயரால் முத்திரை வெற்றி
இனி தரும் பணி யினில் வாழ்விலும் வெற்றி
எடுத்திடும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி
ஏத்துவோம் அவர் புகழ் சேவடி பற்றி (எழு)

நன்மைகள் தொடர்ந்தவர் மகிமையில் வாழ்க
கன்மலை நகராய்ப் பெருமைகள் சூழ்க
நம்பிக்கை விதையாய் மனத்தினில் வளர்க
நற்கனிமரமாய்ச் சிலுவையைக் காண்க (எழு)

https://youtu.be/LLts3N0V2jU
                       _____________________

தாரை

தாரை

சுமார் 12 அடி நீளத்தில், ஊதும்பகுதி சிறுத்தும், இடைப்பகுதி மேல்நோக்கி வளைந்தும், அடிப்பகுதி அகன்றும் காணப்படும் வித்தியாசமான பழந்தமிழ் ஊது கருவியே தாரை. மரியாதையின் அடையாளமாகக் கருதப்படும் கிராமிய இசைக்கருவிகளில் இது முதன்மையானது. கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போதும், தேர்த்திருவிழா காலத்திலும், கொண்டாட்டங்களிலும் இக்கருவி இசைக்கப்படுவதுண்டு. தாரை இசைத்து, தப்பட்டை அடித்து வரவேற்பு வழங்குவதும், சடங்குகளை நிகழ்த்துவதும் தமிழ்ச்சமூகத்தின் மிக முக்கியக்கூறுகளில் ஒன்று.
பாலைப்பண், குறிஞ்சிப்பண், மருதப்பண், செவ்வழிப்பண், கௌசிகம், தோதிறம், சீராகம், காந்தாரம், செந்துருத்தி, படுமலைப்பண், நைவளப்பண், அரும்பாலைப்பண் என பழந்தமிழ் இசையில் 11,991 பண்கள் இருந்ததாகச் சொல்கிறது சிலப்பதிகாரம். உலகில் வேறெந்த இசை வடிவத்துக்கும் இல்லாத பெருஞ்சிறப்பு இது. இசையாலும் கூத்தாலும் இறைவனையே வசியம் செய்தவர்கள் தமிழர்கள். இம்மண்ணில் இருந்தே இசையறியும் நுட்பம் உலகுக்கெல்லாம் பரவியதாகச் சொல்கிறார்கள் அறிஞர்கள். இசைத்தமிழின் பண்சிறப்பும் தாளக்கோட்பாடுகளும் எண்ணற்ற இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இயற்கையைச் சார்ந்து அமைந்த அந்தப் பண்களைப் போலவே, அவற்றுக்கான இசைக்கருவிகளும் இயற்கைத் தன்மை பொருந்தியவை. தாரையின் ஆதிவடிவமும் அவ்விதமானதே. இதன் மூலக்கருவி, விலங்குகளின் கொம்பு.
நாதஸ்வரம், எக்காளம், பூரி, வாங்கி, பாங்கு, திருச்சின்னம் போன்ற பிற்கால காற்றுக்கருவிகள் அனைத்தும் கொம்பின் தொடர்நிலைக் கருவியான தாரையின் மருவிய வடிவங்களே. ஐந்தாறு பாகங்களைக் கொண்ட தாரை, எளிதாகக் கழற்றி மாட்டும் வசதியோடு உருவாக்கப்படும். தற்காலத் தாரைகள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
‘‘தாரை என்றால் சீரான, இடைநிற்காத இசைதரும் கருவி என்று பொருள். இக்கருவியில் இருந்து தோன்றும் இசை, காற்றின் தன்மைக்கேற்ப இடைநிறுத்தம் இல்லாமல் ஒலிக்கும். நாதஸ்வரம் போல காற்றை வசப்படுத்தி இக்கருவியை இசைக்க முடியாது. பலம் கொண்ட அளவுக்கு காற்றை உள்ளே செலுத்த வேண்டும். அக்காற்றின் அளவைப் பொறுத்தே இசையின் தன்மை இருக்கும்’’ என்கிறார் சென்னை இசைக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுப்புலட்சுமி மோகன்.
இக்கருவியை ஒருவர் மட்டுமே தாங்கிப் பிடித்து வாசிப்பது சிரமம். தொய்ந்து கீழே விழாமல் நடுவில் இருவர் தாங்கிப்பிடித்துக் கொள்வதுண்டு. தொடக்கத்தில் இக்கருவி ஆபத்தை உணர்த்தும் குறியீட்டு ஒலியாகவும், குழுக்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற சத்தமாகவும் பயன்பட்டதாகச் சொல்கிறார் டாக்டர் சுப்புலட்சுமி. பிற்காலத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் விழாக்களை அறிவிக்க, அரசர் வருகையை உணர்த்த இசைக்கப்பட்டது. இப்போது இக்கருவி வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.
இக்கருவியில் விரல்துளைகள் இல்லை. காற்றைச் செலுத்த முகப்பில் ஒரு சிறிய துளையும், இசை வெளியேற முடிவில் புனல்வடிவ துளையும் மட்டுமே இருக்கும். சிறுதாரை, கோணத்தாரை, நெடுந்தாரை என சிறிய வடிவ வேற்றுமைகளுடன் இக்கருவி பயன்படுத்தப் பட்டது.
இப்போது திருச்சி மற்றும் தஞ்சை சுந்தரப்பெருமாள் கோவில் பகுதிகளில் மட்டும் தாரைக்கருவிகளும், வாசிக்கும் கலைஞர்களும் மிஞ்சியிருக்கிறார்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் அருகிவிட்டதால், அழிவின் நுனியில் தொக்கி நிற்கிறது இந்த இசைக்கருவி.
சுந்தரப்பெருமாள் கோவிலில், லெட்சுமணன் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் தாரை வாசிக்கிறார்கள். இக்குழுவில் உள்ள மார்க்கண்டேயன் என்பவர் பார்வையற்றவர். உத்திராபதிக்கு காது கேட்காது.
‘‘நமரி, எக்காளம், திருச்சின்னம், தாரை எல்லாம் மங்கள வாத்தியங்கள். எங்க தாத்தா காலத்தில கல்யாணம், காதுகுத்துன்னு வீட்டுல நடக்கிற சுபகாரியங்கள் எல்லாத்துக்கும் தாரைக்காரங்களை கூப்பிடுவாங்களாம். எந்நேரமும் வேலை இருக்குமாம். இப்போ அந்த பழக்கமெல்லாம் அருகிப்போச்சு. எப்பவாவது கட்சி மாநாடு, ஊர்வலங்களுக்கு அழைப்பு வரும். ஊர்வலத்துக்கு முன்னாடி வாசிச்சுக்கிட்டே நாங்க போவோம். எல்லாரும் இந்தக் கருவியை விசித்திரமா பாப்பாங்க. சாதாரணமா எல்லாரும் இந்தக் கருவியைக் கத்துக்க முடியாது. ரத்தத்துல ஊறணும். இதுக்குன்னு எந்த இலக்கண முறையும் கிடையாது. எங்க அப்பா ஊதுறதைப் பாத்து நாங்க கத்துக்கிட்டோம். ஆனா, எங்க புள்ளைகளுக்கு இதில ஆர்வமில்லே. மூச்சை தம் கட்டி ஊதுறதுக்கு இன்னைக்கு உள்ள பிள்ளைகளுக்கு வலிமை போதாது’’ என்கிறார் மார்க்கண்டேயன்.
தமிழகத்தில் ஆதரவற்றுப் போன இக்கருவி, மத்தியப் பிரதேசத்தில் ‘கோஹிக்’ என்ற பெயரிலும், உத்தரப் பிரதேசத்தில் ‘துரி’ என்ற பெயரிலும், கர்நாடகத்தில் ‘பாங்கு’ என்ற பெயரிலும், குஜராத்தில் ‘நாகபாணி’ என்ற பெயரிலும், மகாராஷ்டிராவில் ‘துதரி’ என்ற பெயரிலும், ஒரிசாவில் ‘கஹல்’ என்ற பெயரிலும், கங்கை சமவெளி பிரதேசத்தில் ‘கர்ண’ என்ற பெயரிலும் மிகச்சிறிய மாற்றங்களோடு பரவலாக புழக்கத்தில் இருக்கிறது.