Monday 12 March 2018

சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பிண்ணனி

கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார்.
கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார்.

1852ம் ஆண்டு  இடையன்குடியில் ஊழியஞ்செய்த மிஷனெரி கால்டுவெல் அவர்களால் சாயர்புரம் செமினரியில்
தமிழ் பண்டிதராக கிறிஷ்ண பிள்ளை பணியமர்த்தப்பட்டார்அவர் விதித்த கட்டளை
தன்னை யாரேனும் கிறிஸ்தவனாக்க முயன்றால் வேலையை ராஜினமா செய்துவிடுவேன் என்பதே !!! சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ் செய்த
Rev ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி அவருக்கு
புதிய ஏற்பாட்டைக் கொடுக்கவே
தன் வேலையை ராஜினமா செய்து விட்டார்.
பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச் செய்தார். கிருஷ்ணப்பிள்ளை Mrs  ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள்.

அது அவரை சிந்திக்க தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம் அவர்களோ நம்மை நேசிக்கிறார்களே என்று சிந்தித்தார்.
ஆயினும் மனம் மாறக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தார் அவ்வேளையில் நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்த  கிருஷ்ண பிள்ளையின் சகோதரர்  முத்தையா மற்றும்  தனுக்கோடி ராஜீ ஆகியவர்கள் கிறிஸ்தவத்தை தழுவி மனம் மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து பாளையங்கோட்டை அருகேயுள்ள கரையிருப்புக்கு நடந்தே சென்றார்.

ஆனால் அவரது சகோதரின் சாட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயாணம்,
புதிய ஏற்பாடு, இளமை பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் ஆதியாகமம் முதல்‌ யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்து கொண்டார்.

அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்து️வுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதி கொண்டார்.

வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார்.
தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து
ஹென்றி ஆலப்ர்ட் கிருஷ்ணப்பிள்ளை என 1858 ஏப்ரல் 18ம் தேதி  மயிலாப்பூரிலுள்ள தூய தோமா திருச்சபையில்  திருமுழுக்கு  பெற்றுக்கொண்டார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனே பாடுகளும் வரத்தொடங்கின. முதலில் அவரது மனைவியும் தாயாரும்  எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணி செய்ய சென்னைக்கு ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்நேரத்தில் தான் தனக்கு கர்தரைத் தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து
" சத்தாய் நிஷ்களமாய்"  என்னும் கீர்த்தனையை இயற்றினார். நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.
இலக்கிய வாஞ்சையுள்ள இவர்,
அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க
ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல்,
கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய இரட்சணிய தேவாரம் என்பன கிருஸ்ண பிள்ளையினால் இயற்றப்பட்டது. தமிழ் பண்டிதராக சாயர்புர கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் ஐயர்  இவரை மனிதரை பிடிக்கிறவர் என அழைத்தார்.

இவர் ஏராளமான கிறிஸ்தவ பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல்
தலை சிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூலை எழுதி️னார்.
கிருஸ்ணபிள்ளை அவர்கள்
"கிறிஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சந்தாய் நிஷ்களமாய் பாடல்
இன்றும் தேவாலயங்களில் விரும்பி பாடப்படும் கீர்த்தனையாகும்.

1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73ம் வயதில் மரித்த இவர் சமாதானப்புரத்திலுள்ள
கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
கிறிஸ்தவ விரோதிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள்ஆனால் அவர்களுக்காக மரித்த இ️யேசு இன்னும் அவர்களை நேசிக்கிறார்.
அவர்களை மாற்ற வல்லவராயும் இருக்கிறார்.  
இதை அறிந்த நாம் அறியாதவர்களுக்கு அறிவிப்போம்.

No comments:

Post a Comment