Wednesday, 19 December 2018

Tamizhanange song lyric | பிறந்து சிறந்த மொழிகளுள் சிறந்தே பிறந்த தமிழ் மொழி

தமிழணங்கே பாடல் வரிகள்



பிறந்து சிறந்த மொழிகளுள் சிறந்தே பிறந்த தமிழ் மொழி
நான் இறந்து மீண்டும் பிறப்பினும் என் நாவில் மலர்ந்து ஒளி கொடு …

பிறந்து சிறந்த மொழிகளுள் சிறந்தே பிறந்த தமிழ் மொழி
நான் இறந்து மீண்டும் பிறப்பினும் என் நாவில் மலர்ந்து ஒளி கொடு

சரணம் 1


இறை ஒன்றென்ற தமிழ்மொழி
இனம் இரண்டென்ற தமிழ்மொழி
முத்தமிழாய் ஒலிக்கும் தமிழ்மொழி
திசை நான்கை ஆளும் தமிழ்மொழி

அறம் ஐந்தை ஈன்ற தமிழ்மொழி
நற்குணம் ஆறை கற்பித்த தமிழ்மொழி
சுரம் ஏழில் நான் பாடும் தமிழ்மொழி
வாழ்வை எட்டாய் விரித்த தமிழ்மொழி

-பிறந்து

சரணம் 2

பெருங்காப்பியம் படைத்தத் தமிழ் மொழி
முனி வள்ளுவன் வடித்தத் தமிழ்மொழி
கவி கம்பன் தொடுத்த தமிழ்மொழி
புகழ் பாரதியை பாடிய தமிழ்மொழி

சமணம் ஏற்றிய தமிழ்மொழி
சிவ சைவம் வளர்த்த தமிழ் மொழி
தவயோகம் கொடுத்தத் தமிழ்மொழி
உயர் ஞானம் நிலைத்த தமிழ்மொழி

-பிறந்து