Wednesday, 27 February 2019

தொல்காப்பியத்தில் தமிழிசை

தொல்காப்பியத்தில் தமிழிசை




தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூல் இது. இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்குக்கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும். இருவகை இசை, இசைக் கருவிகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒன்று தொழிலிசை, மற்றையது இன்ப இசை. தொழிலிசைக் கருவி பறை என்றும், இன்ப இசைக் கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தொழிலிசை, இன்ப இசை பற்றியும் இது குறிப்பிடுகிறது.

இசை பற்றிய குறிப்புகள்

"அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே"
"இசைப்பு இசையாகும் என்கிறது ”
இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இந்நூற்பாவின் பொருள்.
“ அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்"
இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் பொருள்.
இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.
“ தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப "
இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.
தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
முதன்மைக் கட்டுரை: பறை (இசைக்கருவி)
தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.
ஐந்துதிணைக்குரிய பண்களும், அதற்குரிய காலமும்
நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.
நிலம் இசைத்த பண் இசைத்த யாழ் முழக்கிய பறை தொழுத தெய்வம் பண்ணிற்குரிய சிறுபொழுது
குறிஞ்சி குறிஞ்சிப்பண் குறிஞ்சி யாழ் வெறியாட்டுப் பறை,
தொண்டகப் பறை சேயோன் என்னும்முருகன் யாமம் அல்லது நள்ளிரவு
முல்லை முல்லைப்பண் முல்லையாழ் ஏறுகோட்பறை மாயோன் என்றதிருமால் மாலை
மருதம் மருதப்பண் மருத யாழ் நெல்லரி, மணமுழவு வேந்தன் என்றஇந்திரன் விடியல்
நெய்தல் செவ்வழிப் பண் விளரி, யாழ் மீன் கோட் பறை வருணன் ஏற்பாடு
பாலை பாலைப்பண் பாலை யாழ் துடி கொற்றவை நண்பகல்
இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.
தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார். இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது இசைப்பா என பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் பறை,யாழ் என்பன வருகின்றன. ஆகவே, இன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற பறையே தமிழரின் ஆதியிசைக் கருவியென்பதும் உறுதியாகிறது. இந்தப் பறையோடும் யாழும் ஆதி இசைக் கருவியே. அத்தோடு குழலும் சேர்கிறது.இதிலிருந்து தமிழிசை தனித்துவ மரபுகளோடு மட்டுமன்றி மரபு சார்ந்த இசைக்ருவிகளோடும் உருவானது என்பது உறுதியாகிறது. பண்டையத் தமிழ் இசை நூல்களில் இசைக்கருவிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. பறை எனப்படும் தோற்கருவியும், வங்கியம் அல்லது குழல் எனப்படும் துளைக்கருவிகளும், யாழ் எனப்படும் நரம்புக்கருவிகளும், மண் வெண்கலத்தால் செய்யப்படும் கஞ்சக்கருவிகள் என்பன 2000 ஆண்டுகட்கு முன்னரே அறியப் பெற்று அவற்றுக்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறது.
உலக இசை வரலாற்றில் தமிழ் இசையே மிகத் தொன்மையான சிறந்த இசை இலக்கணப் பண்பாடுகளுடன் கூடிய இசையாகத் திகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாகப் பல இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மத்தளம், யாழ், குழல் ஆகிய மூன்றையும் சங்கக் காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பண்டையக் காலத்தில் தமிழ் மண்ணில் சிறப்பாக வழங்கி வந்தது.அது உலக இசைக் கருவியாக இருந்தது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய்த் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகத்தைப் புலப்படுத்தும் மொகஞ்சதாராவிலும் அரப்பாவிலும் தமிழர் கண்ட யாழ் இருந்ததை அங்கு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முத்திரைகளில் அறியப்படுகின்றது.
இசை மற்றும் இலக்கியபணியில்,

Sunday, 24 February 2019

Abide with me lyric and chord chart

https://youtu.be/qNm3xmjtW3w

Abide with Me

Audrey Assad

Abide with me, fast falls the eventide
The darkness deepens Lord, with me abide
When other helpers fail and comforts flee
Help of the helpless, oh, abide with me

Swift to its close ebbs out life's little day
Earth's joys grow dim, its glories pass away
Change and decay in all around I see
O Thou who changest not, abide with me

I fear no foe, with Thee at hand to bless
Ills have no weight, and tears no bitterness
Where is death's sting?
Where, grave, thy victory?
I triumph still, if Thou abide with me

Hold Thou Thy cross before my closing eyes
Shine through the gloom and point me to the skies
Heaven's morning breaks, and earth's vain shadows flee
In life, in death, o Lord, abide with me
Abide with me, abide with me

சப்பட்ட | Chappatta

சப்பட்ட...
குறுநாவல்
*****************
1982- ம் ஆண்டில் தோவாளை அருகிலுள்ள செங்கல் சூளையில் நடந்த சம்பவத்தை அங்குள்ள வட்டார மொழியிலேயே சப்பட்ட என்ற குறுநாவலாக படைத்துள்ளார் நூலாசிரியர் சரலூர் த. ஜெகன் அவர்கள்.

வறுமையின் காரணத்தை பயன்படுத்தி வேலை செய்யும் பெண்களை காம வலையில் விழ வைக்கிறான் செங்கல் சூளை முதலாளி. கடைசியில் காலம் அவனுக்கு தண்டனை கொடுக்கிறது.

சமுதாயத்தில் கீழ்த்தரமாக பார்க்கப்பட்ட  படிப்பறிவற்ற,    நாகரீகம் இல்லாத,    செங்கல் சூளையில் எடுபிடி வேலை செய்யும்  'சப்பட்ட' என்ற செல்வராசு  உதவி செய்வதன் மூலமாக வாசகர் மத்தியில் நன்மதிப்பை பெறுகிறான்.

ஐந்தறிவு அணிலுக்கு ஓடி விளையாடுவதற்கும், கூடு கட்டி வாழ்வதற்கும் ஓரறிவுள்ள மரம் இடம் கொடுக்கிறது. அதுபோல ஆறறிவுள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்  என்ற எண்ணத்தோடு இந்நாவலை உருவாக்கியுள்ளார்.

நூலாசிரியர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மீது அதீத பற்றுள்ளவர். 1990 ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரத்த தான இயக்கம்" என்ற பெயரில் கடந்த 29 வருடங்களாக சுமார் 5000 -த்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு இரத்த தானம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அத்தோடு நிற்காமல் தனது பி-நெகட்டிவ் என்ற அரிய வகை இரத்தத்தை 59 முறை தானமாக கொடுத்துள்ளார். இவரின் அரிய செயலை பாராட்டி இவருக்கு 20 மனித நேய விருதுகளை கொடுத்து கௌரவித்துள்ளது.

இது இவருக்கு இரண்டாவது குறுநாவல்.  காக்காச்சி இவரது முதல் குறுநாவலாகும். இவரிடமிருந்து மேலும் பல படைப்புகள் வெளிவரட்டும்.

பாசத்தோடு
கடிகை அருள் ராஜ்.

த. ஜெகன்
49/8 சரலூர்
நாகர்கோவில்
குமரி மாவட்டம்
629002
8903405089

சரலூர் த. ஜெகன் அவர்கள் எழுதிய #சப்பட்ட என்னும் குறுநாவலை ஆன்லைனில் வாங்க கீழே காணும் லிங்கை அழுத்தவும்.

Chappatta

https://www.amazon.in/dp/8193731115/ref=cm_sw_r_cp_api_i_Fh2ACbC8ZZ160