சப்பட்ட...
குறுநாவல்
*****************
1982- ம் ஆண்டில் தோவாளை அருகிலுள்ள செங்கல் சூளையில் நடந்த சம்பவத்தை அங்குள்ள வட்டார மொழியிலேயே சப்பட்ட என்ற குறுநாவலாக படைத்துள்ளார் நூலாசிரியர் சரலூர் த. ஜெகன் அவர்கள்.
வறுமையின் காரணத்தை பயன்படுத்தி வேலை செய்யும் பெண்களை காம வலையில் விழ வைக்கிறான் செங்கல் சூளை முதலாளி. கடைசியில் காலம் அவனுக்கு தண்டனை கொடுக்கிறது.
சமுதாயத்தில் கீழ்த்தரமாக பார்க்கப்பட்ட படிப்பறிவற்ற, நாகரீகம் இல்லாத, செங்கல் சூளையில் எடுபிடி வேலை செய்யும் 'சப்பட்ட' என்ற செல்வராசு உதவி செய்வதன் மூலமாக வாசகர் மத்தியில் நன்மதிப்பை பெறுகிறான்.
ஐந்தறிவு அணிலுக்கு ஓடி விளையாடுவதற்கும், கூடு கட்டி வாழ்வதற்கும் ஓரறிவுள்ள மரம் இடம் கொடுக்கிறது. அதுபோல ஆறறிவுள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்நாவலை உருவாக்கியுள்ளார்.
நூலாசிரியர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மீது அதீத பற்றுள்ளவர். 1990 ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரத்த தான இயக்கம்" என்ற பெயரில் கடந்த 29 வருடங்களாக சுமார் 5000 -த்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு இரத்த தானம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அத்தோடு நிற்காமல் தனது பி-நெகட்டிவ் என்ற அரிய வகை இரத்தத்தை 59 முறை தானமாக கொடுத்துள்ளார். இவரின் அரிய செயலை பாராட்டி இவருக்கு 20 மனித நேய விருதுகளை கொடுத்து கௌரவித்துள்ளது.
இது இவருக்கு இரண்டாவது குறுநாவல். காக்காச்சி இவரது முதல் குறுநாவலாகும். இவரிடமிருந்து மேலும் பல படைப்புகள் வெளிவரட்டும்.
பாசத்தோடு
கடிகை அருள் ராஜ்.
த. ஜெகன்
49/8 சரலூர்
நாகர்கோவில்
குமரி மாவட்டம்
629002
8903405089
சரலூர் த. ஜெகன் அவர்கள் எழுதிய #சப்பட்ட என்னும் குறுநாவலை ஆன்லைனில் வாங்க கீழே காணும் லிங்கை அழுத்தவும்.
Chappatta
https://www.amazon.in/dp/8193731115/ref=cm_sw_r_cp_api_i_Fh2ACbC8ZZ160
No comments:
Post a Comment