சங்கீதம் 33:2,3
J.E.ஜெபா
"அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக.... இசை பிறகு குரல் என்ற வழக்கமான பழக்கமான பாணியைப் பின்பற்றாமல், ஒரு பெண்குயிலின்தொடங்கியது பாடல். பாடலா அது? பாடல் ஆரம்பித்த பதினான்காவது வினாடியில் குழலும் வயலினும் தங்கள் ராஜாங்கத்தை ஆரம்பித்தன. இந்த பாடலை அந்த இசை ஞானியின் மனதிலும் விரல்களிலும் குரலிலும் கொண்டு வந்தற்க்கு வணங்குகிறோம்...
தமிழ் இனிது
குழல் இனிது
யாழ் இனிது
வயலின் இனது
ராஜாவின் இசை இனிது.ஆஹா! இளையராஜாவின் படங்களிலேயே புல்லாங்குழல் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட படம்.
முதல் மரியாதை படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆகி விட்டன.பாடல் வரிகள் இன்றும் ஏதோ ஒரு பயணத்தில் பின்னிரவு வானொலியில் நம் காதுகளில் தாலாட்டாய் கேட்டு கொண்டேதான் இருக்கிறது. கிராமத்து எளிய இசையினை இளையராஜாவும், எளிய வார்த்தை களால் காலத்தை வென்ற பாடல்களை வைரமுத்துவும் கொடுத்திருந்தார்கள்.
குடும்பகவுரத்திற்காக தன் சோகத்தை தன் மனதில் புதைத்து கொண்டு, சிரித்த முகத்தோடு வைராக்கிய வாழ்க்கை வாழும் ஒரு பெரியவர் மீது ஒரு இளம் பெண்ணுக்கு வரும் மரியாதை கலந்த உணர்ச்சியின் கதை அது.எத்தனை காலங்கள் கடந்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிக்காத படம்.
எல்லா இடங்களிலும் வர முடியாது என இறைவன் தாயைப்படைத்தான். இறுதிவரை தாய் உடன்வர முடியாது என்பதாலேயே மனிதன் தாரத்தையும் படைத்துக்கொண்டான். தாயன்பும், அதற்கு நிகரான தாரத்தின் அன்பும் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இரண்டும் சரியாக அமைந்துவிடுகிறது. பலருக்கு ஒன்று கிடைத்தால் இன்னொன்று இல்லையென்றாகி விடுகிறது. நாற்பதுவயதை கடந்த நிலையிலும் ‘பாராட்ட..மடியில் வைத்துத் தாலாட்ட’ தாய்மடி தேடித்தவிப்பது கொடுமை. அத்தகைய ஒரு துரதிர்ஷ்டசாலியான மலைச்சாமி எனும் மனிதரின் கதை தான் முதல் மரியாதை... இதோ உங்களுக்காக! கேட்டு/பார்த்து மகிழுங்கள்
┈┉❀••🌿🍁🌺🍁🌿
🎬 :முதல் மரியாதை-85
🎻 : இளையராஜா
🖌: வைரமுத்து
🎤:இளையராஜா,சித்ரா
👥: தீபன்,ரஞ்சனி
┈━❀••🌿🌺🌿••❀┉┈
பாடல் வரிகள்:
அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்
(அந்த நிலாவ தான்)
மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..
(அந்த நிலாவ தான்)
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்
(அந்த நிலாவ தான்)
ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….
https://youtu.be/VN6czx8ik5c
How to recover Ur AIRCEL number
must watch and share
ஏர்செல் வாடிக்கையாளர்கள்
UPC Code ஐ எடுக்க Network Settings க்கு சென்று Automatic / Manually என்று இருக்கும். இதில் Manually Select செய்து IND AIRTEL 2G ஐ தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் UPC Code ஐ பெறலாம்.
ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் Incoming / Outgoing calls பெற இயலாது. இது UPC Code எடுப்பதற்கான ஒரு மாற்று வழி மட்டுமே.
PORT 9876543210 to 1900 க்கு மட்டுமே SMS செல்லும். UPC Code 24 மணி நேரத்தில் பெறலாம். ஆனால் அனைத்து SMS களையும் Receive செய்து கொள்ளலாம்.
ஏதேனும் இடையூறு ஏற்படின் Mobile ஐ Switch Off செய்து On செய்யவும்
சந்தேகம் இருந்தால் வீடியோவை பாருங்கள்
https://youtu.be/w5NVHqgpvns
இசை மற்றும் இலக்கிபணியில்
J.E.ஜெபா
ஆதி கிறிஸ்தவ சபையில், விசுவாசிகள் ஒருவரையொருவர் பார்க்கும் போது மாரநாதா என்று கூறி வாழ்த்துவது வழக்கம்... மாரநாதா என்பதற்கு நமது ஆண்டவர் வருகிறார் (Our Lord comes) என்று அர்த்தமாகும். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். – (யோவான் 14:3)
ஆனால் சமகாலத்தில் விசுவாசிகள், ஊழியர்களை பார்க்கும்போது, ஹலோ, Praise the Lord, ஸ்தோத்திரம் என்று சொல்கிறார்கள். இதில் ஒரு போதகரையோ, அல்லது விசுவாசிகளையோ பார்த்து ஸ்தோத்திரம் என்று கூறி வாழ்த்துவது தவறான ஒன்றாகும்...
ஸ்தோத்திரம் என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும். 17-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீகன்பால்க் என்பவரால் தான் முதலில் வேதாகமம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியது. இதில் வெளிநாட்டவர்களுக்கு, தமிழ் கற்று கொடுத்து மொழிபொயர்ப்பில் உதவியாக இருந்தது பிராமண சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள். எனவே தமிழ் வேதாகமத்தில் அதிகமான சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. இதைப்பற்றி பிறகு ஒரு கட்டுரை எழுதலாம். ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இணையான தமிழ் சொல் வந்தனம் என்பதாகும்.
சரி இப்போது போதகருக்கு ஸ்தோத்திரம் சொல்வது ஏன் தவறு என்று பார்ப்போம்...
*ஸ்தோத்திரம் என்றால் ஒருவர் தனக்கு செய்த சொல்லொணா நன்மைக்காக, வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் வந்தனம் செய்வதேயாகும்..... இப்படி ஒரு நன்மை என்பது சிலுவையில் இயேசு செய்த நன்மையே. அதற்கு இணையாக எந்த ஊழியரும் தியாகம் செய்வதில்லை...
*துதிக்கும் கனத்திற்கும் பாத்திரர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. அவருக்கு செலுத்த வேண்டிய ஸ்தோத்திரத்தை ஒரு போதகரை பார்த்து ஸ்தோத்திரம் பாஸ்டர் என்று கூறுவதால் அது அந்த பாஸ்டருக்கு உரித்தாகிது.
எனவே, இனி சக விசுவாசிகள் மற்றும் ஊழியர்களை பார்க்கும்போது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தமிழில் கூற பழகுவோம். அல்லது மாரநாதா என்று கூறி அவர் வருகையை எதிர்நோக்குவோம்..
Praise the lord pastor, praise the lord brother, praise the lord sister என்று கூறுவதும் இதே பொருளில் தவறாகுகிறது. இனி Praise the lord Jesus Christ அல்லது வெறுமனே praise the lord என்று கூறி வாழ்த்தி விட்டு, பிறகு சொல்லுங்க பாஸ்டர் என்று அடுத்த வாக்கியமாக தொடங்குங்கள். Lord என்ற பரிசுத்தமான வார்த்தையுடன் மனிதனை குறிக்கும் எந்த வார்த்தையையும் இணைக்க வேண்டாம்.
இசை மற்றும் இலக்கிபணியில்,
J.E.ஜெபா
ஈஸ்டர்
கிரேக்க புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாகவும் இந்த அசுத்த தேவதை கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியத்தில் கடவுளாகவும் இருந்ததுள்ளது. இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைக்க 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது.
இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதம் "லெந்து" நாட்களாகவும் இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது. இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் விவரமாக கோர்த்துவிடுவதற்கு வசமாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக் கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகால RC திருச்சபை.
முதல் நூற்றாண்டில் ஆதி திருச்சபையை வழிநடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, வின்னேர்ற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவும் இல்லை, புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்கள் இந்த சடங்காசாரங்களை கடைபிடிக்கவும் அறிவுறுத்தவில்லை. தங்கள் மாம்ச விருப்பப்படி பண்டிகை கடைபிடிப்பவர்களை கலாத்தியர் 3:1-3 இன் படி புத்தியில்லாத கலாத்தியர் போல் ஆவர்.
பலி செலுத்தும் நாட்களை மையமாக வைத்தே பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டது என பழைய உடன்படிக்கையில் காண்கிறோம்.
ஆனால் புதிய உடன்படிக்கையில் இயேசு ஒரே தரம் பலியாகி, அவர் சொன்னபடியே உயிர்தெழுந்து விண்ணகத்தில் வீற்றிக்கிறார்.
வேதத்தில் சொல்லபடாத இந்த சொல்லை பயன்ப்படுத்தும் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு சமமானது???
"மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்." (வெளி 1: 18). என்று சொல்லியபடி சதாகாலமும் உயிரோடிருக்கிற மெய்த்தேவமாகிய இயேசுவை வருடா வருடம் சாகடிப்பதும் பின்னர் உயிர்ப்பிப்பதும் வழக்கமாகி "ஈஸ்டர்" என்ற வேதத்திற்கு புறம்பாக ஒரு பண்டிகையை திருச்சபைகளும் விசுவாசிகளும் கொண்டாடுவது வேதனை அளிக்கிறது.
ஈஸ்டர் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதத்திலும் ஒரே தேதியிலும் வருவது இல்லை. ஒரு நபரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஒருபோதும் எங்கேயும் எப்போதும் மாறாது. பிறை நிலவு தோன்றும் கணக்கை கடைபிடித்து கொண்டாடப்படுவதால் வருடா வருடம் வெவ்வேறு நாட்களில் வருகிறது.
இதிலிருந்தே இந்தப் பண்டிகை புற இனத்தாரின் விழா எனத் தெரியவில்லையா?
ஈஸ்டர் என்று சொல்லை பயன்ப்படுத்தாமல் "உயிர்த்தெழுந்த ஞாயிறு" என்று வருடத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையோ அல்லது எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடலாமே!!!
ஈஸ்டர் முட்டை என்று கொண்டடுவது அசிரிய காம தேவதையின் மகன் தமூஸ் இறந்த பிறகு 40 நாள்கள் எல்லோரும் நோன்பிருக்க 41வது நாள் முட்டையை உடைத்து கோழி குஞ்சு வெளியே வருவது போல தமூஸ் வருவான் என்பதே விளக்கம்....
ஆகவே, இந்த ஞாயிறு கர்த்தரின் உயிர்த்தெழுதலை கொண்டாட விரும்பினால், ஈஸ்டர்
என்கிற பெயரை
சொல்லாமல்,
கர்த்தரின் உயிர்த்தெழுதலின் பண்டிகை என்போம்.
வாழ்த்துக்கள் அனுப்பும் போதும்
Happy Easter
என்று சொல்லாமல்
Happy / Blessed Lord's Resurrection Day என்று வாழ்த்துவோம்..
உணவு அட்டவணை
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர்
என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.
அளி
அவத்தை
அணி
காயகம்
கைக்கிளை
சங்கம்
தகை
தட்பம்
தண்
தலைக்கை
தலையளி
தொழுதகு
நசை
நயம்
இவையெல்லாம் காதல் என்ற சொல்லுக்கு மாற்று சொற்கள்.
இவைகளை உங்கள் காதலியிடம் சொல்லி ஆச்சியப்படுத்துங்கள்.