Saturday 24 February 2018

அந்த நிலாவ தான் lyric

"அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக.... இசை பிறகு குரல் என்ற வழக்கமான பழக்கமான பாணியைப் பின்பற்றாமல், ஒரு பெண்குயிலின்தொடங்கியது பாடல். பாடலா அது? பாடல் ஆரம்பித்த பதினான்காவது வினாடியில் குழலும் வயலினும் தங்கள் ராஜாங்கத்தை ஆரம்பித்தன. இந்த பாடலை அந்த இசை ஞானியின் மனதிலும் விரல்களிலும் குரலிலும் கொண்டு வந்தற்க்கு  வணங்குகிறோம்... 
தமிழ் இனிது
குழல் இனிது
யாழ் இனிது
வயலின் இனது
ராஜாவின் இசை இனிது.ஆஹா! இளையராஜாவின் படங்களிலேயே புல்லாங்குழல் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட படம்.

முதல் மரியாதை படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆகி விட்டன.பாடல் வரிகள் இன்றும் ஏதோ ஒரு பயணத்தில் பின்னிரவு வானொலியில் நம் காதுகளில் தாலாட்டாய் கேட்டு கொண்டேதான் இருக்கிறது. கிராமத்து எளிய இசையினை இளையராஜாவும், எளிய வார்த்தை களால் காலத்தை வென்ற பாடல்களை வைரமுத்துவும் கொடுத்திருந்தார்கள்.

குடும்பகவுரத்திற்காக தன் சோகத்தை தன் மனதில் புதைத்து கொண்டு, சிரித்த முகத்தோடு வைராக்கிய வாழ்க்கை வாழும் ஒரு பெரியவர் மீது ஒரு இளம் பெண்ணுக்கு வரும் மரியாதை கலந்த உணர்ச்சியின் கதை அது.எத்தனை காலங்கள் கடந்தாலும்,  எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிக்காத படம்.

எல்லா இடங்களிலும் வர முடியாது என இறைவன் தாயைப்படைத்தான். இறுதிவரை தாய் உடன்வர முடியாது என்பதாலேயே   மனிதன் தாரத்தையும் படைத்துக்கொண்டான். தாயன்பும், அதற்கு நிகரான தாரத்தின் அன்பும் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இரண்டும் சரியாக அமைந்துவிடுகிறது. பலருக்கு ஒன்று கிடைத்தால் இன்னொன்று இல்லையென்றாகி விடுகிறது. நாற்பதுவயதை கடந்த நிலையிலும் ‘பாராட்ட..மடியில் வைத்துத் தாலாட்ட’ தாய்மடி தேடித்தவிப்பது கொடுமை. அத்தகைய ஒரு துரதிர்ஷ்டசாலியான மலைச்சாமி எனும் மனிதரின் கதை தான் முதல் மரியாதை... இதோ உங்களுக்காக! கேட்டு/பார்த்து மகிழுங்கள் 

 ┈┉❀••🌿🍁🌺🍁🌿
🎬 :முதல் மரியாதை-85
🎻 : இளையராஜா
🖌:  வைரமுத்து
🎤:இளையராஜா,சித்ரா
👥:  தீபன்,ரஞ்சனி
 ┈━❀••🌿🌺🌿••❀┉┈​​​​​​​​​​
பாடல் வரிகள்:
அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 

 எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்
(அந்த நிலாவ தான்)

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..
(அந்த நிலாவ தான்) 

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

(அந்த நிலாவ தான்) 

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

https://youtu.be/VN6czx8ik5c

No comments:

Post a Comment