Monday 19 February 2018

போதருக்கு ஸ்தோத்திரம் சொல்ல வேண்டுமா??

ஆதி கிறிஸ்தவ சபையில், விசுவாசிகள் ஒருவரையொருவர் பார்க்கும் போது மாரநாதா என்று கூறி வாழ்த்துவது வழக்கம்... மாரநாதா என்பதற்கு நமது ஆண்டவர் வருகிறார் (Our Lord comes) என்று அர்த்தமாகும். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். – (யோவான் 14:3)

ஆனால் சமகாலத்தில் விசுவாசிகள், ஊழியர்களை பார்க்கும்போது, ஹலோ,  Praise the Lord, ஸ்தோத்திரம் என்று சொல்கிறார்கள். இதில் ஒரு போதகரையோ, அல்லது விசுவாசிகளையோ பார்த்து ஸ்தோத்திரம் என்று கூறி வாழ்த்துவது தவறான ஒன்றாகும்...

ஸ்தோத்திரம் என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும்.  17-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீகன்பால்க் என்பவரால் தான் முதலில் வேதாகமம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியது. இதில் வெளிநாட்டவர்களுக்கு, தமிழ் கற்று கொடுத்து மொழிபொயர்ப்பில் உதவியாக இருந்தது பிராமண சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள். எனவே தமிழ் வேதாகமத்தில் அதிகமான சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. இதைப்பற்றி பிறகு ஒரு கட்டுரை எழுதலாம். ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இணையான தமிழ் சொல் வந்தனம் என்பதாகும்.

சரி இப்போது போதகருக்கு ஸ்தோத்திரம் சொல்வது ஏன் தவறு என்று பார்ப்போம்...     
*ஸ்தோத்திரம் என்றால் ஒருவர் தனக்கு செய்த சொல்லொணா நன்மைக்காக, வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் வந்தனம் செய்வதேயாகும்..... இப்படி ஒரு நன்மை என்பது சிலுவையில் இயேசு செய்த நன்மையே. அதற்கு இணையாக எந்த ஊழியரும் தியாகம் செய்வதில்லை...

*துதிக்கும் கனத்திற்கும் பாத்திரர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. அவருக்கு செலுத்த வேண்டிய ஸ்தோத்திரத்தை ஒரு போதகரை பார்த்து ஸ்தோத்திரம் பாஸ்டர் என்று கூறுவதால் அது அந்த பாஸ்டருக்கு உரித்தாகிது.

எனவே, இனி சக விசுவாசிகள் மற்றும் ஊழியர்களை பார்க்கும்போது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தமிழில் கூற பழகுவோம். அல்லது மாரநாதா என்று கூறி அவர் வருகையை எதிர்நோக்குவோம்..

Praise the lord pastor, praise the lord brother, praise the lord sister என்று கூறுவதும் இதே பொருளில் தவறாகுகிறது. இனி Praise the lord Jesus Christ அல்லது வெறுமனே praise the lord என்று கூறி வாழ்த்தி விட்டு, பிறகு சொல்லுங்க பாஸ்டர் என்று அடுத்த வாக்கியமாக தொடங்குங்கள். Lord என்ற பரிசுத்தமான வார்த்தையுடன் மனிதனை குறிக்கும் எந்த வார்த்தையையும் இணைக்க வேண்டாம்.

இசை மற்றும் இலக்கிபணியில்,
J.E.ஜெபா

2 comments: