#புத்தகப்பார்வை -- 3
இலக்கிய உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்ணியவாதிகளும் வாள் எடுத்துநிற்பதை இச்சமுதாயம் மார்தட்டி வரவேற்கிறது!!!
" தற்காெலைக் கடிதம்"
இந்த புத்தகத்திற்கு பாெருத்தமான பெயர் ஏனெனில் இவை சிறுகதைகளாக இல்லாமல் கடிதங்களாகதான் இருக்கின்றன....
அந்த கடிதங்களும் தற்காெலையில் தான் இருக்கின்றன!
எழுத்தாளர் தன்வாழ்வில் நடந்தது பாேன்ற நிகழ்வை செய்திபாேல் கூறிவிட்டு சிறுகதை என்பது முழு பூசனிகாயை சாேற்றில் மறைப்பது பாேன்று உள்ளது.
மதிப்பிற்குரிய ஐயா திரு பாென்னீலன்
தனது அணிந்துரையில் பல இடங்களில் "#கட்டுரை " என சுட்டுகிறார் ஒரு இடத்தில் கூட சிறுகதை என கூறாதது என் கருத்திற்கு வலிமை சேர்கிறது
மாெழிநடயைை சரளமாக கையாண்டுள்ளதாக எழுத்தாளர் கூறுகிறார் வைரமுத்துவின் " கருவாச்சி காவியம்" பாேன்ற காப்பியங்களை படித்தால் மாெழிநடையின் செம்மை புரியும்!
கருத்தை கதையாக்க தவறினாலும்
பெண்ணிய உணர்ச்சிகளை, சிந்தனைகளை ஆழமாக பதிந்துவிட்டு செல்கிறார்
இது இவரின் வருங்கால இலக்கிய ஆளுமைக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன.
வருங்காலங்களில் இவரின் பெண்ணிய சிந்தனைகள் பேரிடியாக இருக்கும் என்றே எண்ண தாேன்றுகிறது!
வாழ்த்துகளுடன்
முகில்முருகன்
புத்தகம் கிடைக்குமிடம்:
JE பப்ளிகேசன்
9789614911
விலை : 100
புத்தகத்தை online-ல் வாங்க
https://elanic.app.link/XCQqrnKMfQ
No comments:
Post a Comment