Tuesday, 4 September 2018

கிறிஸ்தவர்கள் தமிழரா???

கிறிஸ்தவர்கள் தமிழரா???


என மதத்தால் பிளக்கும் வந்தேறி ராசாக்களுக்கு அவர்கள் பிழைப்புக்காக பேசும் மொழியை, எம் உயிரினும் மேலாம் அமுதத்தமிழை வளர்த்தவர்களில் மூலவர் பற்றி சில உண்மைகள்...
இத்தாலி நாட்டில் பிறந்த Constantine Joseph Beschi என்பவர்
கிறிஸ்தவர்களுக்கு குருத்துவ பணியாற்றவும் ஏனையோருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவும் இத்தாலியில் இருந்து புறப்படுகிறார் சில நாடுகளை கடந்து 1710 ம் ஆண்டு இந்தியா வந்தடைகிறார்.

இந்தியாவில் கோவாவில் வந்து இறங்கிய இவர் அப்படியே கொச்சி வந்து கால்நடையாக ஏசுவின் சீடரான புனித தோமா வழியில் பயணித்து மதுரைக்கு வருகிறார்.
மதுரையிலிருந்து கோவில்பட்டி தாலுகா காமநாயகன்பட்டிக்கு வந்த இவர் இங்குள்ள மக்களின் பாஷையை நுண்ணோக்கி பார்க்கிறார் வித்யாசமான சப்தத்துடன் பேசும் அழகை கண்டு வியந்து இம்மொழி பற்றி ஆய்வு செய்கிறார்..

இவர் ஆய்வு செய்த மொழி தமிழ் ...
தமிழின் உச்சரிப்பு அழகை கண்ட இவர் தமிழை கற்றுக்கொள்கிறார்
மற்றும் தமிழில் அன்று இருந்த இலக்கியம் இலக்கணம் அகராதி போன்றவைகளையும் கற்றுக்கொள்கிறார் ....
இதன் பின்னர் தனக்கு ஆங்கிலப்பெயர் வேண்டாம் என்று தைரியநாதசாமி என்று மாற்றிக்கொண்டார்
இவர் தமிழ் எழுத்தின் சிறப்பை மற்ற நாட்டவர்கள் உணர திருக்குறள், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.
தமது நாட்டவர்களான இத்தாலி மக்கள் தமிழை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் - லத்தீன் அகராதியை முதன் முதலில் உருவாக்கினார்.

அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது ...
பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்....
அதன் பிறகு தொண்ணூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார் அதில்
எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் , பொருளதிகாரம் , யாப்பதிகாரம்
அணியதிகாரம்,,
என்று 5 வகை படுத்தி வழங்கியது இவரது சாதனை
மற்றும் புராண தமிழ் இலக்கிய இலக்கணங்கள் எல்லாமும்
கவிதை வடிவில் இருந்து வந்தது..
இதற்க்கு காரணம் அன்றைய காலத்தில் அறிவு புலமை மக்களுக்கு அதிகம் ஆகவே கவிதையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழ்ந்தார்கள்
இன்றைய காலத்தில் திருக்குறளுக்கு விளக்கம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலையை உணர்ந்த இவர் அவற்றை மக்கள் இலகுவாக படிப்பதற்கு தமிழ் இலக்கியங்களை உரைநடையாக மாற்றினார் ..
இதெல்லாம் விட இவர் செய்த மிகப்பெரிய விஷயம்
என்ன தெரியுமா ?

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.
புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம்.

உதாரணத்திற்கு "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் எழுதுவார்கள் (அ:அர, எ:எர)
உதாரணத்திற்கு ஆடு என்று இப்படித்தான் நாம் இன்று எழுதுகிறோம் ஆனால் அக்காலத்தில் ஆடு என்று எழுதுவதற்கு
அர,, டு என்றுதான் எழுதுவார்கள் இதை மாற்றி
ஆடு என்று நெடில் உரையை கொடுத்தவர் இவர் தான்
அதனால் தான் இன்றும் கூட நமக்கு எழுத்து சுருங்கி வருகிறது இல்லையென்றால் நெடில் உள்ள வார்த்தைக்கு இரண்டு தனி தனி வார்த்தைகளை நாம் எழுதவேண்டும் ..

இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
இப்போ சொல்லுங்க இந்த கிருத்துவர் செய்த செயலை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சொல்லிவிட முடியுமா?


இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் அல்ல என்றுதான் உரைத்திட இயலுமா?
ஆமாம் மேலே சொன்ன அந்த இத்தாலி நாட்டு காரர் தமிழுக்கு இவ்வளவு பணிகள் செய்துள்ள பொழுது இவரை பற்றி நமக்கு சொல்லி கொடுக்காதது ஏன் என்று நமக்கு சந்தேகம் எழலாம் .
ஆனால் நமக்கு இவரை பற்றி சொல்லி கொடுத்துளார்கள்
ஆம் ...

இவர்தான் நாம் வரலாற்றில் படிக்க கூடிய
வீரமாமுனிவர்
இவருக்கு சென்னை கடற்கரையில் அண்ணா சிலை நிறுவிப் போற்றினார்..
வரலாறு தெரியாதவனால்
வரலாறு படைக்க மூடியாது..

இவரை பற்றி விக்கிப்பீடியா வில் படிக்க கீழே உள்ள Click Here ஐ சொடுக்கவும்.

இசை மற்றும் இலக்கிய பணியில்,

No comments:

Post a Comment