விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..
உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் அம்மா...
ஒருய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..
படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!
'ஹலோ'னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!
தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்...
புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. "அம்மா"
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!!
அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்.
ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை...
இசை மற்றும் இலக்கியபணியில்
ஜெபா
No comments:
Post a Comment